Bajanai-Padalgal-Vishnu-01

1)                     Om Namo Bhagavatee Vasudevaya
                         Om Namo Bhagavatee Vasudevaya
                         Om Namo Bhagavatee Vasudevaya

ஸ்ரீ ராம் ஜெயாரம் ஜெய-ஜெய ராம் 
ராம் ராம் ஜெயாரம் ஜெய-ஜெய ராம்  …..(3).

ஸ்ரீ ராம் சித்தாராம் ஜெய-ஜெய ராம்  
ராம் ராம் சித்தா ராம் ஜெய-ஜெய ராம்  …..(3)

ஸ்ரீ ராம் ஜெயாரம் ஜெய-ஜெய ராம் 
ராம் ராம் ஜெயாரம் ஜெய-ஜெய ராம்  

ஸ்ரீ ராம் சித்தாராம் ஜெய-ஜெய ராம்  
ராம் ராம் சித்தா ராம் ஜெய-ஜெய ராம்  

Sri Ram Jeyaram jeya-jeya Ram
Ram Ram Jeyaram jeya-jeya Ram …..(3).

Sri Ram Sita-Ram jeya-jeya Ram
Ram Ram Sitaram jeya-jeya Ram …..(3)

Sri Ram Jeyaram jeya-jeya Ram
Ram Ram Jeyaram jeya-jeya Ram

Sri Ram Sita-Ram jeya-jeya Ram
Ram Ram Sitaram jeya-jeya Ram

HARE RAMA HARE RAMA

பாடியவர்:     Malini  from Grigny France 

 

 HARE RAMA HARE RAMA

                Repeat nine times

ஹரே ராம ஹரே ராம
ராமா ராமா ஹரே ஹரே 
ஹரே கிருஷ்ண   ஹரே கிருஷ்ண
கிருஷ்ணாகிருஷ்ணாஹரே ஹரே 
Hare Rame Hare Rama
Rama Rama Hare Hare
Hare Krishna Hare Krishna
Krishna Krishna Hare Hare
பாடியவர்:  SRI_SRI_MURALIDHARA_SWAMIJI

 

 

***********               ***********                 ***********                 ***********                 ***********

              ஓம் நமோ நாராயணாய           OM NAMO NARAYANAYA
                 ஓம் நமோ நாராயணாய           OM NAMO NARAYANAYA
                 ஓம் நமோ நாராயணாய           OM NAMO NARAYANAYA

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம் *
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா *
உன் சேவடி செவ்வி திருக்காப்பு*

அடியோ மோடும் நின்னோடும்* பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு *
வடிவாய் நின் வலமார்பினில் * வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும் * சுடராழியும் பல்லாண்டு *
படைபோர் புக்கு முழங்கும் * அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே *

  பல்லாண்டென்று பவித்திரனைப்   * பரமேடிட்யை * சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை *   வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் *
நல்லாண்டென்று நவின்றுரைப்பார்* நமோ நாராயணாய வென்று *
பல்லாண்டும் பரமாத்மனைச் * சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே

 ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.        உடையவர்

Pallandu pallandu pallayirattandu *
palakodi nuraayiram *
Mallanda tinthol manivannaa *
Un sevadi sevvi tirukkappu *adiyo modum ninnodum * pirivinri ayiram pallandu *
vadivay ninvala marbinil * vajhgindra mangaiyum pallandu *
vadivaar jodhi valatthuraiyum * sudar aazhiyum pallandu *
padaipor pukku mujhangum * appanja sanniyamum pallande *

pallandenru pavithiranaip *   parameittyai * sarikamenum
villandan thannai *   villiputhur vittuchitan virumpiya sol *
nallandendru navindruraipar * namo narayanaya vendru *
pallandum paramathmanaic * suzhundrunu oduvar pallande *

SRI Periyazhvar Thiruvadigale Saranam.            
OUDAYAVAR

 

***********               ***********               ***********               ***********               ***********

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே         

Pullanguzhal Kodutha Moongilgale

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே – எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே                                             (2)
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே                                      (2)             (புல்லாங்குழல்)பன்னீர் மலர் சொரியும் மேகங்களே – எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே                                    (2)

தென்கோடி தென்றல் தரும் ராகங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே – எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே                                                   (புல்லாங்குழல்)

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்                                  (2)

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் – அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்                                                   (புல்லாங்குழல்)

பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் – அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்                                  (2)

பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் – நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்                               (புல்லாங்குழல்)
 

pullanguzhal kodutha moongilgale
engal purushotaman pugazh padungale                         (2)
vandadum gangai malar thotangale
engal madhusudanan pugazh padungale                       (2)     (pullanguzhal kodutha)
 panir malar shoriyum megangale
engal parandaman mei azhagai padungalen                 (2)
thenkoodi thendral tharum ragangale
engal sri krishna murthi pugazh padungale
engal sri krishna murthi pugazh padungale                           (pullanguzhal kodutha)
 Guruvayur thanil avan thavazh-kindravan
oru kodiyodu maduravai algindravan                              (2)
thiruvengadatil avan arulgindravan
andha sri rangathil palli kol-kindravan
andha sri rangathil palli kol-kindravan                                          (pullanguzhal kodutha)
 panjali pugazh kaka thankai koduthan
andru baratha por mudika sangai aduthan                      (2)
pandavaruku urimai ulla pangai koduthan
nam padipadarku keedai enum padam koduthan
nam padipadarku keedai enum padam koduthan.                (pullanguzhal kodutha)

      

 

***********               ***********               ***********               ***********               ***********

                                    பச்சை மாமலை  போல்  மேனி

                                             Pachai maa malai pool meenii

பச்சை மாமலை  போல்  மேனி            பவளவாய்  கமலச்  செங்கண்
அச்சுதா  அமரர்  ரேறே                            ஆயர்தம்  கொழுந்தே  யென்னும்
இச்சுவை  தவிர  யான்போய்                இந்திர  லோகம்  ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்        அரங்கமா  நகருளானே
pachai maa malai pool meeni                     pavalavaai kamala chengan
achudha amarar reereen                             aayartham kozhundee yennum
ichuvai thavira yan pooy                             inthira logam aalum
achchuvai perinum veenden                        arangamaa nagarulanee
ஊரிலேன் காணி இல்லை                      உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம்                             பற்றினேன் பரமமூர்த்தி
காரொலி வண்ணணே என்                   கண்ணனே கதறுகின்றேன்
அருலர் கலைகன் அம்மா                      அரங்கமா நகருளானே
ourilen kaani illai                                         uravu matroruvar illai
paaril nin paadhamuulam                         patrineen paramamurthi
kaaroli vannane yen                                    kannanee katharukindreen
arular kalaikan ammaa                             arangamaa nagarulane

 

***********               ***********               ***********               ***********               ***********

Comments are closed.