திருப்பாணாழ்வார் அருளிச் செய்த « அமலனாதி பிரான் »
Thiruppaanaazhvaar arulLich seytha « Amalanaathi Piraan »
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன், நிமலன் நின்மலன் நீதி வானவன், நீள் மதில் அரங்கத்து அம்மான், திருக் கமலபாதம், வந்து என் கண்ணின் உள்ளன் ஒக்கின்றதே. |
Amalan aathi piraan adiyaarkku ennai aatpaduththa vimalan vinnavarkoon viraiyaar pozhil veengkadavan, nimalan ninmalan niidhi vaanavan, niiL mathil arangkaththu ammaan, thiruk kamalapaatham, vandhu en kannin ullan okkindrathee.. |
பாடியவர்கள்:
|
உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டம் உற நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான், அரைச் சிவந்த ஆடையின் மேல், சென்றது ஆம் என் சிந்தனையே. |
uvandha oullaththanaay oulakam alandhu andam uRa nivandha niiL mudiyan andru neerndha nisaasararaik kavarndha vengkanaik kaaguththan kadiyaar pozhil arangkaththu ammaan, araich sivandha aadaiyin meel, sendradhu aam en sindhanaiyee. |
பாடியவர்:
|
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான் அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில் உந்தி மேல் அது அன்றோ! அடியேன் உள்ளத்து இன்னுயிரே! |
mandhi paay vada veengkada maa malai vaanavarkaL sandhi seyya ninRaan arangkaththu aravin anaiyaan andhi pool niRaththu aadaiyum athan meel ayanaip padaiththadhu oor ezhil undhi meel adhu anRoo! adiyeen oullaththu innuyiree! |
பாடியவர்:
|
சதுர மா மதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர ஒட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன் மதுர மா வண்டு பாட மா மயில் ஆட அரங்கத்து அம்மான் திரு வயிற்று உதர பந்தம், என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே! |
sadhura maa madhil suuzh ilangkaikku iRaivan thalai paththu udhira otti oor vengkaNai uyththavan oodhavaNNan madhura maa vaNdu paada maa mayil aada arangkaththu ammaan thiru vayiRRu udhara pantham, en ullaththul nindru ulaa-kinradhee! |
பாடியவர்:
|
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன் அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும் உண்ட கண்டம், கண்டீர்! அடியேனை உய்யக் கொண்டதெ. |
thunda ven piraiyan thuyar thiirththavan anjsiraiya vandu vaazh pozhil suuzh arangka nagar meeya appan andar-anda pakir andaththu oru maa nilam ezhu maal varai mutrum unda kandam, kandeer! adiyeenai uyyak konndathe |
பாடியவர்:
|
கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீல் வரை போல் மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம் ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார் செய்ய வாய், ஐயோ! என்னைச் சிந்தை கவர்ந்ததுவே! |
kaiyin aar suri sanggu analaazhiyar niil varai pool meyyanaar thulapa viraiyaar kamazh niil mudi em aiyanaar ani arangkanaar aravin anaimisai meeya maayanaar seiya vaay, aiyoo! ennaich sindhai kavarnthathuvee! |
பாடியவர்:
|
ஆல மா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய் ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான் கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில் நீல மேனி, ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே! |
aala maa maraththin ilaimeel oru paalakanaay njaalam eezhum uNdaan arangkaththu aravin aNaiyaan koola maa maNi aaramum muththuth thaamamum mudivu illathu oor ezhil n-iila meeni, aiyoo! n-iRai koNdathu en n-enjsinaiyee! |
பாடியவர்:
|
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே. |
kondal vannanaik koovalanaay vennai unda vaayan en ullam kavarndhaanai andarkoon ani arangkan en amuthinaik kanda kankaL matru ondrinaik kaanaavee. |
பாடியவர்:
|
ஸ்ரீமதே கோபால தேசிகார்ய மஹாதேசிகாய நம: |