திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிய
நமச்சிவாயத் திருப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும் கல் தூணை பூட்டிஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே. |
sotRuNai veethiyan soothi vaanavan potRuNaith thirunthadi porunthak kaithozhak katRuNaip puuttioor kadalil paayssinum kal thuunai puuttioor kadalil paayssinum natRuNai aavathu namachchivaayavee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல் கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. |
puuvinukku arungkalam ponggu thaamarai aavinukku arungkalam aran anjsu aaduthal koovinukku arungkalam koottam illathu naavinukku arungkalam namachchivaayavee. |
பாடியவர்: Mme Thanamathy |
விண் உற அடுக்கிய விற்கின் வெவ்வழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணிநின்று அறுப்பது நமச்சிவாயவே |
viN ura adukkiya virkin vevvazhal unniya pukil avai onum illaiyaam panniya ulakinil payinRa paavaththai nanni ninru aruppathu namachchivaayavee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும் விடுக்கிற் பிரான் என்று வினவுவோம் அல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளில் நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே. |
idukkaNpattu irukkinum iranthu yaaraiyum vidukkir piraan enru vinavuvoom alloom adukkarkiizhk kidakkinum aruLil naam utRa nadukkaththaik keduppathu namachchivaayavee. |
பாடியவர்:
|
வெந்தநீர் அருங்கலம் விரதிகட்கு எலாம் அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம் திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே. |
venthaniir arungkalam virathikatku elaam anthanarkku arungkalam arumaaai aarangkam thingkaLukku arungkalam thikazhum niilmudi nangkalukku arungkalam namachchivaayavee |
பாடியவர்:
P. Anjaalatchi |
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால் நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன் குலம் இலராகிலும் குலத்திற்கு ஏற்பதோர் நலம்மிகக் கொடுப்பது நமச்சிவாயவே. |
salamilan sangkaran saarnthavarkku alaal nalamilan naaLthorum nalguvaan nalan kulam ilaraakilum kulaththiku yeerpathoor nalammikak koduppathu namachchivaayavee |
பாடியவர்:
Mourougayene |
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே. |
veedinaar ulakinil vizhumiya thoNdarkaL kuudinaar anneRi kuudich senRalum oodineen oodich senRu uruvam kaaNdalum naadineen naadiRRu namachchivaayavee. |
பாடியவர்: Mme Laxshumi |
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலரும் காண்பது நல்லக விளக்கது நமச்சிவாயவே. |
illaka viLakkathu iruL keduppathu sollaka viLakkathu soothi ullathu pallaka viLakkathu palarum kaanpathu nallaka viLakkathu namachchivaayavee |
பாடியவர்: Mme Mourougayane |
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறியே சரணாதல் திண்ணமே அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன்னெறியாவது நமச்சிவாயவே |
munneRi yaakiya muthalvan mukkaNan thanneRiyee saraNaathal thinnamee anneRiyee senRu angku adainthavarkku elaam nanneRiyaavathu namachsivaayavee |
பாடியவர்:
|
மாப்பிணை தழுவிய மாதுஓர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்தும் ஏத்தவல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே |
maappiNai thazhuviya maathuoor paakaththan puuppiNai thirunthadi porunthak kaithozha naappiNai thazhuviya namachsivaayap paththum eeththavallaar thamakku idukkaN illaiyee |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |