மதுரகவியாழ்வார் அருளிச் செய்த
மதூரகவி ஆழ்வார் வாழ்க்கை வரலாறு
Madurakavi Azhwaar life history video:
கண்ணிநுண் சிறுத்தாம்பு
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில், நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால், அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே. |
kanni nun siruth thaambinaal kattu unnap panniya peru maayan en appanil, nannith then gurukuur nambi enrakkaal, annikkum amuthu uurum en naavukkee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன், மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே! தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி , பாவின் இன்னிசை பாடித் திரிவனே. |
naavinaal navirru inbam eythineen, meevineen avan ponnadi meymmaiyee! theevu marru ariyeen gurukuur nambi , paavin innisai paadith thirivanee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்; பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள் உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே. |
thirithanthu aakilum theevapiraan udai kariya koolath thiruvuruk kaanpan naan; periya van gurukuur nakar nambikku aal uriyanaay adiyeen petrra nanmaiyee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள், புன்மை ஆகக் கருதுவர்; ஆதலின், அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும் தன்மையான் சடகோபன் என் நம்பியே! |
nanmaiyaal mikka naanmarai yaalarkal, punmai aakak karuthuvar; aathalin, annaiyaay aththanaay ennai aandidum thanmaiyaan sadakoopan en nambiyee! |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும், நம்பினேன் மடவாரையும், முன் எல்லாம் செம்பொன் மாடத் திரு குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றெ. |
nampineen pirar nanporuL thannaiyum, nampineen madavaaraiyum, mun ellaam sempon maadath thiru gurukuur nambikku anpanaay adiyeen sathirththeen, inrre. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்
|
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான் நின்று தன் புகழ் ஏத்த அருளினான்; குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி; என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே |
indru thotthum ezhumaiyum empiraan nindru than pugazh eeththa arulinaan; kundra maadath thiruk gurukuur nambi; endrum ennai igazhvu ilan kaanminee |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்
|
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான் பண்டை வல்வினை பாற்றி அருளினான்; எண் திசையும் அறிய இயம்புகேன் ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே. |
kandu kondu ennaik kaarimaarap piraan pandai valvinai paattri arulinaan; en thisaiyum ariya iyampukeen on thamizhch sadakoopan arulaiyee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்
|
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ் அரு மறையின் பொருள்; அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்; அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே! |
arul kondaadum adiyavar inpura arulinaan av aru maraiyin poruL; arul kondu aayiram in thamizh paadinaan; arul kandiir iv ulakinil mikkathee! |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்
|
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்; தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட் புக்க காதல் அடிமைப் பயன் அன்றே. |
mikka veethiyar veethaththin utporul nirkap paadi en nenjull niruththinaan; thakka siirch sadakoopan en nampikku aat pukka kaathal adimaip payan andree. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்
|
பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான் குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி; முயல்கின்றேன் அவன் மொய் கழற்கு அன்பையே. |
payan andru aakilum paanggu alar aakilum seyal nandraagath thiruththip pani kolvaan kuyil nindru aar pozhil suuzh gurukuur nambi; muyalkindreen avan moy kazharku anbaiyee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்
|
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம் அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே. |
anban thannai adaindhavarkatku ellaam anban then gurukuur nagar nambikku anbanaay mathurakavi sonna sol nambuvaar pathi vaiguntham kaanminee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்
|
ஸ்ரீமதே கோபால தேசிகார்ய மஹாதேசிகாய நம: |