12) ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை பாரில் நின் பாதமூலம் பற்றினேன் பரமமூர்த்தி காரொலி வண்ணணே என் கண்ணனே கதறுகின்றேன் அருலர் கலைகன் அம்மா அரங்கமா நகருளானே |
ourilen kaani illai uravu matroruvar illai paaril nin paadhamuulam patrineen paramamurthi kaaroli vannane yen kannanee katharukindreen arular kalaikan ammaa arangamaa nagarulane |
12) பாடியவர்: Laxshmi |
13) மனத்தில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை; சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன்; வாளா புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா! எனக்கு இனிக் கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே! |
manaththil oor thuuymai illai, vaayil oor insol illai; sinaththinaal seRRam n-ookkith thiiviLi viLivan; vaaLaa punaththuzhaay maalaiyaanee! ponni suuzh thiruvarangkaa! enakku inik kathi en sollaay? ennai aaLudaiya koovee! |
13) பாடியவர்: Madurakavi Adi Govindan |
14) தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன்; உவர்த்த நீர் போல என் தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்; துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கு அறத் துரிசன் ஆனேன்; அவத்தமே பிறவி தந்தாய், அரங்கமா நகருளானே! |
Thavaththu Laar thammil alleen thanam padaiththaaril alleen; uvarththa niir poola en than utravarkku ondrum alleen; thuvarththa sevvaayi naarkkee thuvakku aRath thurisan aaneen; avaththamee piravi than thaay, arangkamaa nakaruLaanee! |
14) பாடியவர்: Jayapragash Priya |
15) மெய் எல்லாம் போக விட்டு, விரிகுழலாரில் பட்டு, பொய் எல்லாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன் ஐயனே! அரங்கனே! உன் அருள் என்னும் ஆசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன்; பொய்யனேன் பொய்யனேனே. |
Mey ellaam pooga vittu, virikuzhalaaril pattu, poy ellaam pothin-thu koNda pootkaneen vanthu ninReen aiyanee! arangkanee! un aruL ennum aasai thannaal, poyyaneen vanthu n-inReen; poyyaneen poyyaneenee. |
15) பாடியவர்: K. Jayasree |
16) தாவி அன்று உலகம் எல்லாம் தலைவிளாக் கொண்ட எந்தாய், சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண் மாலே, ஆவியே! அமுதே! எந்தன் ஆருயிர் அனைய எந்தாய், பாவியேன் உன்னை அல்லால் பாவியேன், பாவியேனே. |
thaavi anRu oulagam yellaam thalaiviLaak koNda enthaay, seeviyeen ounnai allaal sikkenach sengkaN maalee, aaviyee! amuthee! enthan aaruyir anaiya enthaay, paaviyeen ounnai allaal paaviyeen, paaviyeenee. |
16) பாடியவர்: Subhashini |
17) மேம் பொருள் போக விட்டு, மெய்ம்மையே மிக உணர்ந்து, ஆம் பரிசு அறிந்து கொண்டு, ஐம்புலன் அகத்து அடக்கிக், காம்பு அறத் தலை சிரைத்து, உன் கடைத்தலை இருந்து வாழும், சோம்பரை உகத்தி போலும்; சூழ் புனல் அரங்கத்தானே! |
meem poruL pooga vittu, meymmaiyee miga uNarnthu, aam parisu aRin-thu koNdu, aimpulan akaththu adakkik, kaampu aRath thalai siraiththu, un kadaiththalai irunthu vaazhum, soomparai ugaththi poolum; suuzh punal arangkath thaanee! |
17) பாடியவர்: Madurakavi Adi Govindan |
18) அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித் தமர்களில் தலைவராய சாதி – அந்தணர்களேலும் நுமர்களை பழிப்பர் ஆகில், நொடிப்பது ஓர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்; அரங்கமா நகருளானே! |
amara oor angkam aaRum veetham oor naankum oothith thamarkaLil thalaivaraaya saathi – anthanarkaleelum numarkaLai pazhippar aakil, nodippathu oor aLavil aangkee avarkaL thaam pulaiyar poolum; arangkamaa nagaruLaanee! |
18) பாடியவர்: K. Jayasree |
19) பெண் உலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் எண் இலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப விண் உளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா ! உன்னை என்னோ ? களைகணாக் கருதுமாறே ! |
Pen ulaam sadaiyinaanum piramanum unnaik kaanbaan EN ilaa uuzhi uuzhi thavam seythaar velki nirpa ViN ulaar viyappa vandhu aankku andru arulaai iindha KaNNara ! unnai ennoo ? kalaikkaNaak karuthumaaree ! |
19) பாடியவர்: Madurakavi Adi Govindan |
20) வள எழும் தவள மாட மதுரைமா நகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற கண்ணனை அரங்க – மாலை துவளத் தொண்டு ஆய தொல் சீர்த் தொண்டரடிப் பொடி சொல் இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே ! |
Vala ezhum thavala maada maduraimaa nagaram thanul Kavala maal yaanai kondra kaNNanai aranga – maalai Thuvalath thoNdu aaya thol siirth thondar adip podi sol Ilaya pun kavithaiyeelum empiraarku iniyavaaree ! |
20) பாடியவர்:
|