Bajanai-Padalgal-Sivan-00

ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய

சிவமயம் திருச்சிற்றம்பலம்

                                  ஹர ஹர நம பார்வதி பதயே                                   Hara hara nama paarvathi pathayee
                                 ஹர ஹர மகா தேவா                                                    Hara hara makaa theevaa
                                 தென் நாடுடைய சிவனே போற்றி                         Then naadudaya sivanee pottri
                                 எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி                   Yen naattavarukum iraiva pottri

 

குரு வணக்கம் :

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருசிந்தித்தல் தானே

அக சந்தான குரவர்கள்:
அருட்குரவர் எழிற்கயிலை முழக்காவல்
நந்திபிரான் அடிகள் போற்றி
தெருட்சிபெறு மனக்கமல சனத்குமார
முனிவனிரு திருத்தாள் போற்றி
இருட்டு மலத் தகல் சத்ய ஞான
தரிசினி சரண இணைகள் போற்றி
மருட்சியுறு பரஞ்சோதி யருஞ்சீல
குருபரங்கால் மலர்கள் போற்றி

புறச் சந்தான குரவர்கள்:
ஈராண்டில் சிவஞானம் பெற்று உயர்ந்த
மெய்கண்டார் இணைத்தாள் போற்றி
நாராண்ட பல் அடியார்க்கு அருள்புரிந்த
அருள்நந்தி நற்றாள் போற்றி
நீராண்ட குடந்தை நகர் மறை
ஞானசம்பந்தர் நிழல் தாள் போற்றி
சீராண்ட தில்லை நகர் உமாபதியார்
செம்பதுமத் திருத்தாள் போற்றி

நால்வர் துதி
பூழியர் கோன் வெப்பொழித்த
புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில்
அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன்
தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர்
திருத்தாள் போற்றி போற்றி

சமயக் குரவர் துதி
சைவத்தின் மேல் சமயம் வேறில்லை
அதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேல் தெய்வம் இல்
எனும் நான்மறைச் செம்பொருள்
வாய்மை வைத்த சீர்திருத்
தேவாரமும் திருவாசகமும்,
உய்வைத் தரச் செய்த நால்வர்
பொற்றாள் எம் உயிர்துணையே

 

Guru Vanakam :

Thelivu Guruvin thirumeeni kaandal
Thelivu Guruvin thirunaamam seppal
Thelivu Guruvin thiruvaarthai keetal
Thelivu Guruvuru sindithal thanee

Agach santhana kuravargal:
Arut kuravar yezhir kayilai muzhankaaval
nandhi piraan adigal pootri
Therutchi peru manak kamala sanathkumarar
munivaru thiruthaal pootri
Iruttu malathgal Sathyagnayana
darishini sarana inaigal pootri
Marutchiouru param-jothi yarunseela
guruparang kaal malargal pootri

Purach santhana kuravargal:
Iïr-aandil sivagnayanam petru ouyarn-tha
meikandaar inai-thal pootri
Naranda pal adyarku arulpurintha
arul nandhi natraal pootri
Niraanda kudanthai nagar marai
gnayana sambandhar nizhalthaal pootri
Siraanda thilainagar oumaa-pathiyaar
sempathumath thiruthaal pootri

Nalvar thudhi:
Pouzhiyar koon vep pozhitha
pugaliyarkoon kazhal pootri
Aazhi misaik kal mithappil
anainda piraan adi pootri
Vaazhi thirunaavalur van
thondar padham pootri
Ouzhimali thiru-vaadhavourar
thiruthaal pootri pootri

Samaya kuravar thudi:
Saivathin meel samayam veerilai
adhir-chaar sivamaam
Deivathin meel deivam il
yenum naanmaraich semporul
Vaimai vaiththa seer thiru
thevaramum thiruvaasagamum
Ouivai tharach seitha naalvar
por-thaal yem ouyir thunaiyee.

Comments are closed.