Pancha – Puranam
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையம் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே ( தேவாரம் ) |
masil veenaiyum malai mathiyamum veesu thendralum veangila veenilum moosu vandarai poigaiyam pondrathey eesan yendhai inayadi neezhaley (Thevaram) |
அம்மையே அப்பா வொப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச் செம்மையே யாய சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே (திருவாசகம் ) |
ammaiyey appa voppilla maniye anbinil vilaindha aramuthey poimaiyee perukkip pozhudhinaich surukum puzhuththalaip pulaiyanein tranaiku semmaiye yaya sivapatha malitha selvamey sivaperu maaney immaye unnai chikkena piditheyn (Thiruvasagam) |
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை கரைவிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற எஞ்சிவனைத் திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டு கண்டுள்ளங் குளிரவென் கண் குளிர்ந்தனவே (திருவிசைப்பா) |
kattravar vizhungum karpagak kaniyai karaivilla karunaima kadalai mattravar ariyaa maanika malaiyai mathipavar manamani vilakkai settravar purangal settra enchivanai thiru veezhi mizhalai veetru irundha kottravan trannai kandu kandullang kuliraven kan kulirndhanavey (Thiruvisaippa) |
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னியதில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தனர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே (திருப்பல்லாண்டு) |
Paalukkup paalagan veendi azhuthida paar kadal yeendha piraan maaluku chakkaram andrarul seithavan manniyathillai thannul aalikkum andhanar vaazhgindra chitram balamey idamaagap baaliththu nattam payilaval laanukkey pallaandu kooruthumey (Thiruppalandu) |
உலகெ லாமுணர்ந் தோதற்கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவான் (பெரிய புராணம்) |
Ulagelaam unarnd thotarkariavan Nilavu laviya neer mali veniyan alagil soothiyan ambalath thaduvaan malar silambadi vaazhththi vananguvaan (Periya puraanam) |
வான் முகில் வளாது பெய்க ! மணி வளம சுரக்க ! மன்னன் கோல் முறை அரசு செய்க ! குறை இல்லா உயிர்கள் வாழ்க ! நான் மறை அரங்கள் ஓங்க ! நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம் எல்லொரும் நன்றாக இருக்க வேண்டும்அதற்கு ஈசன் மகேசன் அருள வேண்டும் எல்லொரும் ஒன்றாக இருக்க வேண்டும் அதற்கும் ஈசன் மகேசன் அருள வேண்டும் இன்பமே சூழ்க எல்லொரும் வாழ்க இன்பமே சூழ்க எல்லொரும் வாழ்க இன்பமே சூழ்க எல்லொரும் வாழ்கதென் நாடுடைய சிவனே போற்றி எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றிஆருர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையாரா போற்றி அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி!! திருச்சிற்றம்பலம் |
vaan mugil valaathu peyga ! mani valam surakka ! mannan kool murai arasu seyga ! kurai illaa uyirgal vaazhga ! naan marai arankal oonka ! nattravam velvi malga meenmai kol saivaneethi vilangguga ulaga mellaamellorum nandraga erukka veendum adharku eesan magesan arula veendum ellorum ondraga erukka veendum adharkum eesan magesan arula veendum inbamey suuzhga yellorum vaazhga inbamey suuzhga yellorum vaazhga inbamey suuzhga yellorum vaazhga then naadudaya sivanee pottri yen naattavarukum iraiva pottri aadaga madurai arasee pottri kuudal ilangu gurumani pottriaarur amarndha arasee pottri siiraar thiruvai yaaroo pottri annaamalai yem annaa pottri kannaar amudhak kadalee pottri kaavay kanagathiralee pottri kayilai malaiyaanee pottri pottri Thiruchitrambalam |