Vaishnavam-Thirumangai Azhwar – Vadineen_Varundineen

திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி

முதற் பத்து – முதல் திருமொழி : வாடினேன்

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்;
        பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன்; கூடி இளையவர் – தம்மோடு
        அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன்; ஓடி உய்வதோர் பொருளால்
        உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து,
நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்.
vaadineen vaadi varunthineen manaththaal;
        perun – thuyar idumpaiyil piRanthu
kuudineen; kuudi iLaiyavar – thammoodu
        avar tharum kalaviyee karuthi
oodineen; oodi uyvathoor poruLaal
        uNarvu enum perum patham therin – thu,
naadineen; naadi naan kaNdu koNdeen
        naarayaNaa ennum naamam.
பாடியவர் : அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்

 

கள்வனேன் ஆனேன்; படிறு செய்து இருப்பேன்;
        கண்டவா திரிதந்தேனேலும்,
தெள்ளியேன் ஆனேன்; செல் கதிக்கு அமைந்தேன்;
        சிக்கெனத் திருவருள் பெற்றேன்;
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்;
        உடம்பு எலாம் கண்ண நீர் சோர,
நள் இருள் அளவும், பகலும் நான் அழைப்பன்,
        நாராயணா என்னும் நாமம்.
kalvaneen aaneen; padiru seydhu iruppeen;
        kandavaa thirithanthee neelum,
thelliyeen aaneen; sel kadhikku amaintheen;
        sikkenath thiruvarul petreen;
ul elaam urukik kural thazhuththu ozhintheen;
        udampu elaam kanna niir soora,
naL irul alavum, pakalum   naan azhaippan,
       naaraayaNaa ennum   naamam.
பாடியவர் :

 

 

எம்பிரான், எந்தை, என்னுடைச் சுற்றம்,
        எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்,
அம்பினால் அர்க்கர் வெருக்கொள நெருக்கி,
        அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்;
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
        மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள்! உய்ய நான் கண்டுகொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்.
empiraan, endhai,   ennudaich sutram,
        enakku arasu ennudai   vaazhnaaL,
ambinaal arkkar   verukkola nerukki,
        avar uyir seguththa   em annal;
vampu ulaam   soolai maa mathil   thanjai
        maa manik   kooyilee vanangki
nambikaal! uiya   naan kandukondeen
        naaraayanaa ennum   naamam.
பாடியவர் :

 

இல்-பிற்ப்பு அறியீர், இவர் அவர் என்னீர்
        இன்னது ஓர் தன்மை என்று உணரீர்,
கற்பகம்! புலவர் களைகண்! என்று உலகில்
        கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர்! சொல்லுகேன் வம்மின்;
        சூழ் புனல் குடந்தையே தொழுமின்;
நல் பொருள் காண்மின்; பாடி நீர் உய்மின்
        நாராயணா என்னும் நாமம்.
il-pirppu ariyiir, ivar avar enniir
        innathu oor thanmai endru unariir,
karpakam! pulavar kalaikan! endru ulagil
        kandavaa thondaraip paadum
sol porul aaliir! sollukeen vammin;
        suuzh punal kudandhai yee thozhumin;
nal porul kaanmin; paadi niir uymin
        naaraayaNaa ennum naamam.
பாடியவர் :

 

கற்றிலேன் கலைகள்; ஐம்புலன் கருதும்
        கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
        பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன்; தவிர்ந்தேன்
        செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன், அடியேன்
        நாராயணா என்னும் நாமம்.
katRileen kalaikaL; aimpulan karudhum
        karuththu ullee thiruth thineen manaththai
petRileen athanaal peethaiyeen nanmai
        peru nilaththu aar uyirkku ellaam
setRamee veeNdith thiri tharveen; thavirn – theen
        sel kathikku uyyumaaRu yenni
nal thunai aagap patRineen, adiyeen
        naaraayaNaa ennum naamam.
பாடியவர்கள்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்

.

குலம் தரும்; செல்வம் தந்திடும்; அடியார்
        படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும்; நீள் விசும்பு அருளும்;
        அருளொடு பெரு நிலம் அளிக்கும்;
வலம் தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற
        தாயினும் ஆயின செய்யும்;  
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்.
kulam tharum; selvam thanthidum; adiyaar
        padu thuyar aayina ellaam
nilam tharam seyyum; niiL visumbu aruLum;
        aruLodu peru nilam aLikkum;
valam tharum; matrum thanthidum; petra
        thaayinum aayina seyyum;  
nalam tharum sollai naan kandukondeen
        naaraayanaa ennum naamam.

 

பாடியவர் : அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்

 

மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
        மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ தெய்வ நல் மாலை
        இவை கொண்டு சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும்போது அழைமின்; துயர் வரில் நினைமின்
        துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு
        நாராயணா என்னும்   நாமம்.
manjsu ulaam soolai vandu arai maa niir
        mangkaiyaar vaal kalikandri
senjsolaal eduththa theyva nal maalai
        ivai kondu sikkenath thondiir
thunjsum poothu azhaimin; thuyar varil ninaimin
        thuyar iliir sollilum nandru aam
nanjsu thaan kandiir nammudai vinaikku
        naaraayanaa ennum naamam.

 

பாடியவர் : அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன்

 

 

Comments are closed.