1) காவலில் புலனை வைத்து, கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழிதருகின்றொம் நமன் தமர் தலைகள் மீதே, மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற; ஆவலிப் புடைமை கண்டாய், அரங்கமா நகருளானே! |
kaavalil pulanai vaiththu, kali thannaik kadakkap paaynthu naavalitu uzhitharu kinRom naman thamar thalaigaL miithee, muu-vulagu uNdu umizhntha muthalva! nin naamam katRa; aavalip pudaimai kandaay, arangkamaa nakaruLaanee! |
1) பாடியவர்கள்: Roukmani Selvy & Madurakavi Adi Govindan |
2) பச்சை மாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ரேறே ஆயர்தம் கொழுந்தே யென்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே |
pachai maa malai pool meeni pavalavaai kamala chengan achudha amarar reereen aayartham kozhundee yennum ichuvai thavira yan pooy inthira logam aalum achchuvai perinum veenden arangamaa nagarulanee |
2) பாடியவர்: Madurakavi Adi Govindan |
3) வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும், பாதியும் உறங்கிப் போகும்; நின்றதில் பதினையாண்டு பேதை பாலகன் அது ஆகும்; பிணி பசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன், அரங்கமா நகருளானே! |
veetha nuul piraayam nuuRu manisar thaam puguvareelum, paathiyum uRangkip poogum; ninrathil pathinaiy aaNdu peethai paalagan athu aagum; pini pasi muupputh thunpam, aathalaal piRavi veendeen, arangkamaa nakaruLaanee! |
3) பாடியவர்: Vasanthi Janarthani |
4) வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை, கொண்டல் மீது அணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை, அண்டர்கோன் அமரும் சோலை, அணி திருவரங்கம் என்னா மிண்டர்பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே! |
vandinam muralum soolai, mayilinam aalum soolai, kondal miithu aNavum soolai, kuyilinam kuuvum soolai, andarkoon amarum soolai, ani thiruvarangkam ennaa miNdarpaaynthu unnum sootRai vilakki naaykku idumin niiree! |
4) பாடியவர்கள்: Roukmani Selvy & Madurakavi Adi Govindan |
5) மெய்யர்க்கே மெய்யன் ஆகும், விதி இலா என்னைப் போல, பொய்யர்க்கே பொய்யன் ஆகும்; புட்கொடி உடைய கோமான் உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்தபின்னை ஐயப்பாடு அற்த்துத் தோன்றும்; அழகன் ஊர் அரங்கம் அன்றே |
meyyarkkee meyyan aagum, vithi ilaa ennaip poola, poyyarkkee poyyan aagum; putkodi udaiya koomaan ouyya ppoom ounarvin naarkatkou oruvan endru uNarnthapinnai aiyappaadu aRththuth thoondrum; azhagan uur aranggam anRee |
5) பாடியவர்: N.Thilagavathi |
6) சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம் மாதரார் கயற்கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப் போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து, தன்பால் ஆதரம் பெருக வைத்த, அழகன் ஊர் அரங்கம் அன்றே |
suuthanaayk kaLvanaakith thuurththaroodu isain-tha kaalam maatharaar kayaRkaN ennum valaiyuL patdu azhun-thuveenaip pootharee enRu sollip pun-thiyuL pugun-thu, thanpaal aatharam peruga vaiththa, azhagan uur aranggam anRee |
6) பாடியவர்: |
7) குடதிசை முடியை வைத்து குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை நோக்கி, கடல் – நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு, உடல் எனக்கு உருகுமாலோ! என் செய்கேன் உலகத்தீரே! |
kudathisai mudiyai vaiththu guNathisai paadham neetti, vadathisai pinbu kaattith then thisai ilangkai nookki, kadal – niRak kadavuL endhai aravaNaith thuyilumaa kaNdu, udal enakku ourugumaaloo! en seykeen oulakath theeree! |
7) பாடியவர்: P. Kamalini |
8) கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப் பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள், எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்தது ஓர் கிடைக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன்? எழையேன், எழையேனே!. |
kangaiyiR punitham aaya kaaviri naduvu paattup pongu niir paranthu paayum puum pozhil arangkan thannuL, engkaL maal iraivan iisan kidan thathu oor kidaikkai kandum, enganam maranthu vaazhkeen? ezhaiyeen, ezhaiyeenee!. |
8) பாடியவர்: P. Anjaalatchi |
9) வெள்ளநீர் பரந்து பாயும் விரி பொழில் அரங்கந் தன்னுள், கள்வனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டும் உள்ளமே! வலியை போலும்! ஒருவன் என்று உணர மாட்டாய்; கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே! |
veLLan-iir paran-thu paayum viri pozhil arangkan- thannuL, kaLvanaar kidan-thavaaRum kamala n-an mugamum kaNdum uLLamee! valiyai poolum! oruvan enRu uNara maattaay; kaLLamee kaathal seythu un kaLLaththee kazhikkinRaayee! |
9) பாடியவர்: Adiyaar Mourougayen |
10) பேசிற்றே பேசல் அல்லால், பெருமை ஒன்று உணரல் ஆகாது, ஆசற்றார் தங்கட்கு அல்லால், அறியல் ஆவானும் அல்லன்; மாசற்றர் மனத்து உள்ளனை வணங்கி நாம் இருப்பது அல்லால், பேசத்தான் ஆவது உண்டோ? பேதை நேஞ்சே! நீ சொல்லாய். |
peesitRee peesal allaal, perumai onRu uNaral aakaathu, aasatRaar thangkatku allaal, aRiyal aavaanum allan; maasatRar manaththu oullanai vaNangki naam iruppathu allaal, peesath thaan aavathu oundoo? peethai neenjsee! nee sollaay. |
10) பாடியவர்: P.Kamalini
|
11) போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனையமாட்டேன் தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்; காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்; அது தன்னாலே ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே! என் செய்வான் தொன்றினேனே? |
poothellaam poothu koNdu un ponnadi punaiya maatteen thiithilaa mozhikaL koNdu un thiruk kuNam seppa maatteen; kaathalaal nenjsam anbu kalan thileen; athu thannaalee eethileen arangkarkku ellee! en seyvaan thonRi neenee? |
11) பாடியவர்: M. Pritha |