ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்ரீமதே மஹாதேசிகாய நம:
பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு
தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது
Naathamunikal arulich seythathu
குருமுக மநதீ த்ய ப்ராஹ வேதா நஷேஷான் நரபதி பரிக் லுப்தம் ஷுல்கமாதாது காம: | ஸ்வஷுர மமரவந்த்யம் ரங்க நாதஸ்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி || |
Gurumuga manathii thya praaha veedhaa nasheeshaan narapathi parik luptham shulgamaadhaathu kaama: | Svashura mamara vanthyam rangka naathaSya Saakshaath Thvija kulathilakam tham vishNuchiththam namaami || |
பாடியவர்கள் :
|
பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
Paandiya pattar aruLich seythavai
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுதூர் என்று ஒருகால் * சொன்னார் கழற்கமலம் சூடினோம் * – முன்னாள் கிழியறுத்தான் என்றுரைத்தோம் * கீழ்மையினிற் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே வந்து |
பாண்டியன் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று * ஈண்டிய சங்கமெடுத்து ஊத * – வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான் * பாதங்கள் யாமுடைய பற்று |
minnaar thadamathiL suuzh villiputhuur enRu orukaal * sonnaar kazhaRkamalam suudinoom * – munnaaL kizhiyaRuththaan enRuraiththoom * kiizhmaiyiniR seerum vazhiyaRuththoom nenjsamee vanthu |
paandiyan kondaadap pattar piraan vanthaan enRu * iittiya sangkam eduththu uutha * – veendiya veethangkaLoothi virainthu kizhiyaruththaan * paathangkaL yaamudaiya patrru |
பாடியவர்கள் :
|