நம்மாழ்வார் அருளிச் செய்த
உயர்வற உயர் நலம்
உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுதெழு என் மனனே! |
Uyarvara uyar nalam udaiyavan yevan avan mayarvara mathi nalam arulinan yavan avan Ayar varum amarargal athipathi yavan avan, Thuyar aru sudar adi thozdhudezhu yen mananee. |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
மனன் அகம் மலம் அற மலர் மிசை எழு தரும் மனன் உணர்வு அளவிலன் பொறி உணர்வு அவை இலன் இனன் உணர் முழு நலம் எதிர் நிகழ் கழிவினும் இனன் இலன் எனன் உயிர் மிகு நரை இலனே |
Manan agam malam ara malar misai yezhu tharum. Manan unarvu alavilan pori unarvu avai ilan Inan unar muzhu nalam yethir nigazh kazhivinum Inanan ilan yenan uyir migu narai ilanee |
பாடியவர்: தியாகராஜன் துளசி |
இலனது உடையனிது என நினைவு அரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே |
ilanathu udaiyanithu ena ninaivu ariyavan nilanidai visumpidai uruvinan aruvinan pulanodu pulanalan ozhivilan parantha an nalanudai oruvanai naNukinam naamee |
பாடியவர்: தியாகராஜன் துளசி |
நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள் தாம் அவர் இவர் உவர் அது இது உது எது வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கவை ஆமவை ஆயவை ஆய் நின்ற் அவரே |
naam avan ivan uvan avalL ivaL uvaL evaL thaam avar ivar uvar athu ithu uthu ethu viim avai ivai uvai avai nalam thiingkavai aamavai aayavai aay nindr avaree |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
அவரவர் தமதமது அறிவறி வகை வகை அவரவர் இறையவர் என அடி அடைவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதி வழி அடைய நின்றனரே |
avaravar thamathamathu arivari vagai vagai avaravar iraiyavar ena adi adaivarkaL avaravar iraiyavar kuraivilar iraiyavar avaravar vithi vazhi adaiya ninranaree |
பாடியவர்: P.Kamanili and Mathurakavi Adi Govindan |
நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் ஒர் இயல்வினர் என நினைவு அரியவர் என்றும் ஒர் இயல்வொடு நின்ற எம் திடரே |
nindranar irunthanar kidanthanar thirinthanar nindrilar irunthilar kidanthilar thirinthilar endrum or iyalvinar ena ninaivu ariyavar endrum or iyalvodu nindra em thidaree |
பாடியவர்: P.Kamanili |
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை படர் பொருள் முழுவதுமாய் அவை அவை தொறும் உடல் மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே |
thida visumbu eri vali niir nilam ivai misai padar porul muzhuvathumaay avai avai thorum udal misai uyir enak karandhenggum parandhulan sudar migu suruthiyul ivai unda suranee |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும் வரன் முதலாய் அவை முழுதுண்ட பர பரன் புரம் ஒரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவு இயந்து அரன் அயன் என உலகழித்து அமைத்துள்னே. |
surar arivaru nilai vin mudhal muzhuvadhum varan mudhalaay avai muzhudhunda para paran puram oru muunreriththu amararkkum arivu iyandhu aran ayan ena ulakazhiththu amaiththulnee |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள் உளன் என இலன் என இவை குனம் உடைமையில் உளனிரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே |
ulan enil ulan avan uruvam ivvuruvugaL ulan alan enil avan aruvam ivvaruvukaL ulan ena ilan ena ivai gunam udaimaiyil ulaniru thakaimaiyodu ozhivilan parandhee |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த அண்டம் இதென நில விசும்பு ஒழிவற கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே. |
parandha than paravaiyul niir thorum parandhuan parandha andam ithena nila visumpu ozhivara karandha sil idam thorum idam thigazh porul thoum karandhengkum parandhulan ivai unda karanee |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை வரன் நவில் திறல் வலி அளி பொறையாய் நின்ற பரன் அடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே |
kara visumbu eri vali niir nilam ivai misai varan navil thiral vali ali poraiyaay ninra paran adi meel gurukuurch sadakoopan sol niral nirai aayiraththu ivai paththum viidee |
பாடியவர்: அடியேன் மதுரகவி ஆதி கோவிந்தன் |
ஸ்ரீமதே கோபால தேசிகார்ய மஹாதேசிகாய நம: |