நன்று நாள் தொரும் நம்வினை போயறும் என்று மின்பந் தழைக்க இருக்கலாஞ் சென்று நீர் திருவேட்களத் துள்ளுறை துன்று பொற்சடை யானைத் தொழுமினே. 1 |
nandru naal thorum namvinai pooyarum endrum inbam thazhaika irukalam sendru neer thiruveer kalathu ulourai thundru porchadai yaanai thozhumineen |
பாடியவர்: மதுரகவி ஆதி கோவிந்தன் |
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன் பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன் விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு திருப்ப னாகில் எனக்கிட ரில்லையே. 2 |
Karuppu vensilayk kaamanai kaaindhavan Poruppu vensiyay yarpuranj setravan Viruppan meeviya veetkalank kai thozhu Thirupann aagil yenak kidar illaiyee |
பாடியவர்: |
வேட்க ளத்துறை வேதியன் எம்மிறை ஆக்க ளேறுவர் ஆனைஞ்சு மாடுவர் பூக்கள் கொண்டவன் பொன்னடி போற்றினால் காப்பர் நம்மைக் கறைமிடற் றண்ணலே. 3 |
vetkalath thurai veethiyan yemmirai aakka leeruvar aanainjsu maaduvar puukkal kondavan ponnadi pootrinaal kaappar nammaik karaimidatr rannlee |
பாடியவர்: |
அல்ல லில்லை அருவினை தானில்லை மல்கு வெண்பிறை சூடு மணாளனார் செல்வ னார் திரு வேட்களங் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே. 4 |
Alla lillai aruvinai thaanillai Malgu venpirai suudum manalanaar selvanaar thiruveet kalanj kaithozha valla varaagil vazhiadhu kaanminee |
பாடியவர்: |
துன்ப மில்லைத் துயரில்லை யாமினி நம்ப னாகிய நன்மணி கண்டனார் என்பொ னாருறை வேட்கள நன்னகர் இன்பன் சேவடி யேத்தி யிருப்பதே. 5 |
Thunbamillaith thuyarillaiyaam mininambanaagiya nan manikandanaar emponaarurai veetkala nannagar inbanseevadi yeeththi iruppathee |
பாடியவர்: |
கட்டப் பட்டுக் கவலையில் வீழாதே பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் நீர் சிட்ட னார் திரு வேட்களங் கைதொழப் பட்ட வல்வினை யாயின பாறுமே. 6 |
Kattap pattuk kavalayil vizhathee potta valluyir poovathan munam niir sittanaar thiruveetkalanj kaithozhap patta valvinai yaayina paarumee |
பாடியவர்: |