பெரியாழ்வார் அருளிச் செய்த
திருப்பல்லாண்டு
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் * மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா * உன் சேவடி செவ்வி திருக்காப்பு ** |
Pallandu pallandu pallayirattandu * palakodi nuraayiram * Mallanda tinthol manivannaa * Un sevadi sevvi tirukkappu * |
பாடியவர்கள் :
|
அடியோ மோடும் நின்னோடும் * பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு * வடிவாய் நின் வலமார்பினில் * வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு * வடிவார் சோதி வலத்துறையும் * சுடராழியும் பல்லாண்டு * படைபோர் புக்கு முழங்கும் * அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே * |
adiyo modum ninnodum * pirivinri ayiram pallandu * vadivay ninvala marbinil * vajhkindra mangaiyum pallandu * vadivaar jodhi valatthuraiyum * sudar aazhiyum pallandu * padaipor pukku mujhangum * appanja sanniyamum pallande * |
பாடியவர்கள் :
|
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் * வந்து மண்ணும் மணமும் கொண்மின் * கூழாட்பட்டு நின்றீர்களை * எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் * எழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் * இராக்கதர் வாழ் * இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் * பல்லாண்டு கூறுதுமே |
vaazhaatpattu ninRiir ulliireel * vanthu mannum manamum konmin * kuuzhaatpattu nindriirgalai * engkaL kuzhuvinil pukuthalottoom * ezhaatkaalum pazhippiloom naangkaL * iraakkathar vaazh * ilangkai paazhaa Laagap padai poruthaanukkup * pallaaNdu kuuRuthumee |
பாடியவர்கள் :
|
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து * எங்கள் குழாம் புகுந்து * கூடுமனமுடையீர்கள் வரம்பொழி * வந்தொல்லைக் கூடுமினோ * நாடும் நகரமும் நன்கறிய * நமோ நாராயணாய என்று * பாடு மனமுடைப் பத்தருளீர் * வந்து பல்லாண்டு கூறுமினே |
eedu nilaththil iduvathan munnam vanthhu * engkaL kuzhaam pukunthu * kuudumanamudaiyiirkaL varampozhi * van thollaik kuuduminoo * naadum nagaramum nankaRiya * namoo naaraayaNaaya endru * paadu manamudaip paththaruliir * vanthu pallaaNdu kuuRuminee |
பாடியவர்கள் :
|
அல்வழக்கு ஒன்றும் இல்லா * அணிகோட்டியர் கோன் * அபிமானதுங்கன் செல்வனைப் போலத் திருமாலே * நானும் உனக்குப் பழவடியேன் * நல்வகையால் நமோ நாராயணாவென்று * நாமம் பல பரவி * பல் வகையாலும் பவித்திரனே * உன்னைப் பல்லாண்டு கூறுவனே |
Alvazhkkondrum illaa * anikoottiyar koon * abimaana thungan Selvanai poola thirumaalee * naanum unakkup pazhavdiyeen * Nalvagaiyaal namoo naaraayanaaya endru * naamam pala paravi * Pal vagaiyaalum pavithiranee * unnaip pallaandu kooruvanee |
பாடியவர்கள் :
|
பல்லாண்டென்று பவித்திரனைப் * பரமேடிட்யை * சார்ங்கமென்னும் வில்லாண்டான் தன்னை * வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல் * நல்லாண்டென்று நவின்றுரைப்பார் * நமோ நாராயணாய என்று * பல்லாண்டும் பரமாத்மனைச் * சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே |
pallandenru pavithiranaip * parameittyai * sarikamenum villandan thannai * villiputhur vittuchitan virumpiya sol * nallandendru navindruraipar * namo narayanaya endru * pallandum paramathmanaich * suzhundrunu oduvar pallande |
பாடியவர்கள் :
|