பாயும்நீர் அர்ங்கந் தன்னுள் பாம்பு -அணைப் பள்ளி கொண்ட மாயனார் திரு நன் மார்வும் மரகத – உருவும் தோளும் தூய தாமரைக் கண்களும் துவர் – இதழ் பவள வாயும், ஆய சீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலல் ஆமே? |
paayumniir arngkan thannuL paampu -aNaip paLLi koNda maayanaar thiru nan maarvum marakatha – uruvum thooLum thuuya thaamaraik kaNkaLum thuvar – ithazh pavaLa vaayum, aaya siir mudiyum theesum adiyaroorkku akalal aamee? |
பாடியவர்: Jayasree Kumar |
இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே, தனி கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்; கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள் பனி – அரும்பு உதிருமாலோ என் செய்கேன், பாவியேனே? |
ini thiraith thivalai mootha eRiyum than paravai miithee, thani kidanthu arasu seyyum thaamaraik kannan emmaan; kani irun thanaiya sevvaayk kannanaik kaNda kaNkaL pani – arumpu uthiru maaloo en seykeen, paavi yeenee? |
பாடியவர்:
|
பணிவினால் மனமனது ஒன்றிப் பவள – வாய் அர்ங்கனார்க்குத் துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய் அணியின் ஆர் செம்பொன் ஆய அருவரை அனைய கோயில் மணி அனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கல் ஆமே? |
panivinaal manamanathu ondrip pavaLa – vaay arngkanaarkkuth thuNivinaal vaazha maattaath thollai nenjsee! nii sollaay aNiyin aar sempon aaya aruvarai anaiya kooyil maNi anaar kidanthavaatRai manaththinaal ninaikkal aamee? |
பாடியவர்: Madurakavi Adi Govindan |
உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு உன்று இல்லாக் கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே! |
uLLaththee uRaiyum maalai uLLuvaan uNarvu undru illaak kaLLaththeen naanum thoNdaayth thoNdukkee koolam puuNdu uLLuvaar uLLiRRu ellaam udan irunthu aRithi enRu veLkippooy ennuLLee naan vilavu aRach siriththitteenee! |
பாடியவர்:
|
பழுது இலா ஒழுகல் ஆற்றுப் பல சதுப்பேதிமார்கள், தன் குலத்தவர்களேலும் எம் அடியார்கள் ஆகில், தொழுமின் நீர், கொடுமின், கொள்மின் என்று நின்னோடும் ஒக்க வழிபட அருளினாய் போல்; மதில் திருவரங்கத்தானே! |
Pazhudhu ilaa ozhukal aatRup pala sathuppeethi maarkaL, than kulaththavarkaLeelum em adiyaarkaL aakil, thozhumin niir, kodumin, koLmin endru ninnoodum okka vazhipada aruLinaay pool; mathil thiruvarangkath thaanee! |
பாடியவர்:
|
மற்றும் ஓர் தெய்வம் உண்டே? மதி இலா மானிடங்காள்! உற்றபோது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்; அற்றம் மேல் ஒன்று அறியீர்; அவன் அல்லால் தெய்வம் இல்லை; கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே. |
MatRum oor theyvam undee? mathi ilaa maanidangkaaL! utRapoothu andri niingkaL oruvan endru uNara maattiir; atRam meel ondru aRiyiir; avan allaal theyvam illai; katrinam meeyththa endhai kazhaliNai paNimin niiree. |
பாடியவர்:
|
ஸ்ரீமதே கோபால தேசிகார்ய மஹாதேசிகாய நம: |